
இரத்தக்கரை படாதவர்களுக்கு பொறுப்பை வழங்குமாறு மகிந்த கூறிய விடயத்திற்கு தானும் இணங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இரத்தக்கரை யாரின் கைகளில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால் பிள்ளையான் கைகளிலே இருக்கிறது. அதைவிட மகிந்த ராஜபக்சவின் கைகளிலே இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற நிலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தவுடன் நாட்டில் எவ்வாறு நிலவரம் இருந்ததோ அதே போன்று மீண்டும் நிலவரம் மாறியிருக்கிறது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தவுடன் பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஒரு ஆயுதமாக எடுக்கப்பட்டது.இவ்வாறான பல பிரச்சினைகள் காணப்பட்டன. அந்த அனைத்து பிரச்சினைகளையும் தற்போது மக்கள் முகங்கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments: