News Just In

12/14/2023 01:43:00 PM

பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!




கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும்
இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேலும், இவர்களுக்கான பரீட்சை கால அட்டவணையும் அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் இருப்பின் அவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இருந்து அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

No comments: