News Just In

12/21/2023 08:40:00 AM

201 பயணிகளுடன் பயணித்த ஸ்ரீலங்கன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு :10 நிமிடங்களில் தரையிறக்கம்!



மாலைதீவு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறங்கியதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது அந்த ஏர்பஸ் ஏ-330 ரக விமானத்தில் 201 பயணிகள் இருந்தனர். அந்த விமானத்தில் இருந்த பயணிகளை விரைவில் மற்ற விமானங்களில் மாலைத்தீவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாலை 06.30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் மீதமுள்ள பயணிகளை மாலைதீவுக்கு அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

No comments: