News Just In

12/21/2023 07:22:00 AM

14 வயது பாடசாலை சிறுமிக்கு இராணுவ வீரர் ஒருவரால் நேர்ந்த கொடூர சம்பவம்!

14 வயது பாடசாலை சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றசாட்டின் பேரில் இளம் வயது இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் புத்தளம் - நவகத்தேகம, வெம்புவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குருவிட்ட, கெமுனுஹேவா பலகாயவில் பணியாற்றும் வஹரக - தலழுவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் குறித்த சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இராணுவ வீரரை ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நவகத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: