News Just In

11/30/2023 09:47:00 AM

தாதிய பயிலுநர்களுக்கு புதிய சேவை நிலையங்களுக்கான கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு!!




நூருல் ஹுதா உமர்
நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தாதிய பயிலுநர்களுக்கு சுகாதார அமைச்சு கடந்த வாரம் தாதியர் நியமனங்களை வழங்கியது.

அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இணைப்புச் செய்யப்பட்ட தாதியர்களை கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு நியமித்து அவர்களுக்குரிய புதிய சேவை நிலையங்களுக்கான கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு (28) இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி எஸ்.ஆர்.இஸ்ஸடீன், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.வீ.வஜிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


No comments: