News Just In

11/30/2023 06:57:00 PM

தேசிய ரீதியில் புகையிரதம் பேரூந்து என இணைந்த சேவையாக போக்குவரத்து திட்டமிடல் அமையவேண்டும்!சாணக்கியன்




நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் (29.11.2023). தேசிய ரீதியில் புகையிரத, அரச மற்றும் தனியார் பேரூந்து என ஒரு இணைந்த சேவையாக போக்குவரத்து திட்டமிடல் அமைய வேண்டும். மகிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக் காலத்தில் தேசிய கொள்கை இல்லாமையின் காரணமாக அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, அதிவேக புகையிரத போக்குவரத்து என்பன அம்பாந்தோட்டையில் அமைக்கப் பட்டமையினால் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் அமைக்கப்படவில்லை. குருணாகல் மாவட்டத்தில் நாமல் ராஜபக்க்ஷ தேர்தலில் போட்டியிட்ட போதும் குருணாகல் மாவட்டத்தில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையினைக் கூட அமைக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷவினர் எப்போதும் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர்.

தற்போது புகையிரத சேவைகளுக்கு மாத்திரமே பயண உத்தரவுச் சீட்டு (Warrant) வழங்கப்படுகின்றது. அதனை பேரூந்து சேவைகளுக்கும் மிக விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைககள் புனரமைக்கப்பட்டு அதில் பணி புரியும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றுதல் வேண்டும். அத்துடன் இங்கு பணிபுரிந்து ஓய்வடைந்தவர்களுக்கும் உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படல் வேண்டும்.


நல்லாட்சி காலத்தில் ADB வங்கி, உலக வங்கி போன்றவற்றினூடாக சிபார்சு செய்யப்பட்ட iProject இற்கான வெளிநாட்டு நிதியானது கோட்டாபயவின் முறையற்ற பொருளாதார கொள்கையினால் தடை செய்யப்பட்டது. இதற்கு காரணம் கோட்டாபய மாத்திரம் அல்ல கோட்டாபயவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு வாக்களித்த அனைவரும் காரணம் என மகிந்த ராஜபக்ஷ தனது உரையில் கூறினார். ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படாமைக்கு காரணம் இந்த iProject செயற்படுத்தப்படாமையே காரணமாகும். எனவே அரசாங்கத்துடன் இணைந்து வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த எமது மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

No comments: