News Just In

11/16/2023 12:49:00 PM

பறிபோகும் தமிழர் பகுதிகள் !




முல்லைத்தீவு, கொக்குத் தொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தமிழ் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மீனவர் சங்கத்தினர், கிராம அமைப்புக்கள் இணைந்து சிங்கள மீனவர்களிடம் வினவியபோது,

குறித்த இடத்தினை பிக்கு ஒருவரிடமிருந்து தாம் பெற்றுக் கொண்டதாகவும், இதனாலேயே இங்கே வாடி அமைத்து தொழில் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.’

இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு கடற்தொழில் திணைக்களத்திடம் தமிழ் மக்கள் தெரியப்படுத்திய போதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கொக்குத்தொடுவாயும் தம்மிடமிருந்து பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அண்மைக் காலமாக முல்லைத்தீவு புலிபாய்ந்தகல், தண்ணிமுறிப்பு, கொக்குதொடுவாய் வடக்கு ஆகிய சிங்கள மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: