News Just In

11/20/2023 06:29:00 PM

கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் – உடற்கூற்று பரிசோதனை முடிவு




அலெக்ஸ் என்ற 26 வயதான நபர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு 10ஆம் திகதி மல்லாவி நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட அவர் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மதியம் யாழ் போதன வைத்தியசாலையில், சட்டவைத்திய அதிகாரி உ. மயூரதனால் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இறப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

உடற்கூற்று பரிசோதனையில் இயற்கை மரணமில்லை எனவும் சித்திரவதை மற்றும் அடி காயமே உயிரிழப்பிற்கு காரணம் என தெரியவந்துள்ள நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உப பரிசோதகர் (SI) உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments: