News Just In

11/09/2023 09:36:00 AM

பின்தங்கிய துறைநீலவனை வைத்தியசாலைக்கு உடனடி ஆம்புலன்ஸ் வசதி!




நேற்றய  தினம் பாராளுமன்றத்தில் நடந்த கேள்வி பதிலின் போது. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்களுக்கான கேள்வி. மட்டக்களப்பு மாவட்டத்தின் களவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணை பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமிய வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது இருப்பினும் அங்கு இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டிய போதிலும் தற்போது ஒரு வைத்தியர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளார் அவரும் மற்றுமொரு வைத்தியசாலையிலும் கடமைகளை மேற்கொள்வதற்கு வைத்தியர் நியமிக்கப்பட்டுள்ளதால் இந்தப் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆரம்ப காலத்தில் இம்மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இருந்த போதிலும், தற்போது ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் உள்ளது என்று பல நாள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அவ் வைத்தியசாலைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டி வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்துள்ளார். அவ் கேள்விபதிலுடன் வைத்தியர்களுக்கான நிலுவையில் உள்ள தருவதாக பல வருடங்களுக்கு முன் உறுதியளித்த கொடுப்பனவுகள் தொடர்பாகவும். 1500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் (சிறப்பு மற்றும் பிற மருத்துவர்கள் இருவரும்) நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் UK, AUS மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மருத்துவர்களாகப் பயிற்சி பெற தகுதித் தேர்வை முடித்துள்ளனர், ஆனால் இன்னும் நியமனம் பெற வில்லை எமது அரசு துறையில் உள்ள மொத்த மருத்துவர்ளின் எண்ணிக்கை 20000. இவை இவ்வாறு இருக்க எமது நாட்டின் சுகாதார துறையில் மற்றும் எமது மாவட்டத்தில் ஏற்பட போகும் மருத்துவ ஆளணி பற்றாக்குறையினை எவ்வாறு இவ் அரசும் மக்களும் கையாள போகின்றார்கள் என்பது பற்றி அமைந்திருந்தது.

No comments: