News Just In

11/29/2023 01:07:00 PM

காசாவில் ஹமாஸிடம் பிணைக்கைதியாக இருந்ததால் சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு:





காசாவில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் 50 நாட்கள் பிணைக்கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமி ஒருத்தி, பேசுவதற்கு பதிலாக மிக மெல்லிய குரலில் கிசுகிசுக்க மட்டுமே செய்கிறாள்.
காசாவில் ஹமாஸ் பிடியில் இருந்ததால் சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

அட்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிடித்துச் செல்லப்பட்டு பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒன்பது வயதுச் சிறுமியான எமிலியும் (Emily Hand) ஒருத்தி.

50 நாட்கள் ஹமாஸிடம் பிணைக்கைதியாக இருந்த எமிலி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாள். ஆனால், அவள் முன்போல் பேச மறுக்கிறாள். பேசுவதற்கு பதிலாக அவள் மெல்லிய குரலில் கிசுகிசுக்கவே செய்கிறாள்.

அவளது தந்தையான தாமஸ் (Thomas Hand, 63), ஒன்பது வயதில் பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டு, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தொடர்ச்சியாக மாற்றப்பட்டுக்கொண்டே இருந்ததால், தன் மகள் எலிலி அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மேலும், காசாவில் இருக்கும்போது, பேசினால் வெளியே இருக்கும் இஸ்ரேல் படைகளுக்குக் கேட்டுவிடும் என்பதால், ஹமாஸ் குழுவினர் குழந்தைகளை அமைதியாக இருக்கும்படி உத்தரவிட்டிருக்கலாம் என்றும், அதனால் பிள்ளைகள் பயந்து பேசுவதையே நிறுத்தியிருக்கலாம் என்றும் தாமஸ் கருதுகிறார்.

No comments: