News Just In

11/01/2023 07:03:00 PM

மாணவர்கள் மத்தியில் தொழுநோய் ! மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 பேர் !

120 மாணவர்களுக்கு தொழுநோய்



இலங்கையில் 14 வயதுக்கு உட்பட்ட 120 மாணவர்கள் கடந்த 9 மாதங்களில், தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் கூறுகிறது.

அதிக எண்ணிக்கையான மாணவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 31 ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பாடசாலை மாணவர்களும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவர்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில், முழு நாட்டிலும் 1150 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (Mycobacterium Leprae) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்றுநோயே தொழுநோய். இந்த பாக்டீரியா மிக மெதுவாக பெருகுவதால் நோய்த் தொற்று ஏற்பட்டு குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள் தோன்றும். இந்த நோய், தோல், நரம்பு, மேல் மூச்சு மண்டலத்தை பாதிக்கும்.

No comments: