News Just In

11/02/2023 05:21:00 AM

வடக்கு - கிழக்கில் இருந்து கனடா - பிரித்தானியா நோக்கி படையெடுக்கும் பெருமளவு மக்கள்!



இலங்கையிலுள்ள பொருளாதார நெருக்கடியினாலும் வசதியான ஒரு வாழ்க்கை தரத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காகவும் வடக்கு கிழக்கிலிருந்து பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடியேறுகின்றனர் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

 ஊடகமொன்றுக்கு  கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

முன்னதாக திருகோணமலையில் முதலாம் இடத்தில் இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இது மூன்றாம் இடத்திற்கு செல்லும் அபாயத்திலும் இருக்கின்றது.

ஒவ்வொரு நாளும் திருகோணமலையிலிருந்து குறைந்தது 10 குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடியேறுவது மாவட்ட இருப்புக்கு பெரும் சவாலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: