News Just In

11/27/2023 09:28:00 PM

தரம் 10 இல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு திட்டம்!



கல்வி அமைச்சு தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 11 ஆம் ஆண்டுக்கு பதிலாக 10 ஆம் ஆண்டில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் கல்வியை முன்கூட்டியே முடிப்பதற்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின்படி பிள்ளைகள் 15 வயதில் பொதுத் தேர்வுக்கும், 17 வயதில் உயர்தரப் பரீட்சைக்கும் தோற்ற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments: