News Just In

10/03/2023 03:40:00 PM

மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

 கவனயீர்ப்புப் போராட்டம்!




மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் முல்லத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்புப் போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ”நீதித்துறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம்,சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதிதுறையை அச்சுறுத்தாதே,பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை நீதிமன்றம், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் உட்பட 8 நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது




No comments: