News Just In

10/06/2023 11:55:00 AM

அமைச்சரை விட அதிகாரிக்கு சக்தி அதிகமா? ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விற்பனைக்கு?

அமைச்சரை விட அதிகாரிக்கு சக்தி அதிகமா? ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விற்பனைக்கு? இரா .சாணக்கியன் 




நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 05.10.2023. சமகால அரசியல் விவாதங்களுடன். அமைச்சரை விட அதிகாரிக்கு சக்தி அதிகமா? ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விற்பனைக்கு? இலங்கைக்கும் இந்தியாவிற்குமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமா?

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது.

சனல்4 வெளிப்படுத்தியுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நிராகரிப்பதாக கூறி ஜனாதிபதி நாட்டுக்கு பெருமை சேர்க்கவில்லை. மாறாக சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், அண்மையில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கிய ஜனாதிபதி, எங்களை இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்கின்றீர்களா என்று கேட்டுள்ளார். அவர்கள் அப்படி நினைப்பதில் தவறில்லை. இங்கே இவ்வாறு நடந்தால் அப்படி நினைப்பார்கள். நீதிவான் நாட்டை விட்டு வெளியேறி செல்லும் போது அப்படி கேட்கலாம் தானே. நீங்கள் இவ்வாறு செய்வதால் நடக்கும் வேலையே இது. பிரகீத் எக்னலிகொடவுக்கு எனன நடந்தது என்று அசாத் மௌலான கூறுவதாக தெரிவிக்கின்றார். ஆனால் நீங்கள் சர்வதேச விசாரணையை நிராகரிக்கின்றீர்கள். நீங்கள் அவ்வாறு கூறி நாட்டுக்கு பெருமையை கொண்டு வரவரவில்லை. அபகீர்த்தியையே கொண்டு வந்துள்ளீர்கள். வெளிவிவகார அமைச்சின் மகன்தானே அமைச்சருக்கு ஆலோசனை வழங்குகின்றார். அவர்தான் ஜனாதிபதிக்கு இந்த நேர்காணலுக்கு ஆலோசனை வழங்கினாரோ தெரியவில்லை. சிறுபிள்ளை தனமான பதிலையே அவர் வழங்கியுள்ளார். இதேவேளை, யாழ்- தமிழ்நாடு படகு சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அடிக்கடி கதைக்கப்படுகின்றது. ஆனால் அதற்கான தடைகள் எங்கே இருக்கின்றது என்பது தொடர்பில் தெரியவில்லை. இலங்கையில் வாழ முடியாமையினால் இந்தியாவுக்கு சென்ற இரண்டு இலட்சம் பேர் வரையிலானோர் அகதிகளாக இருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு இங்கு வருவதற்கு உரிமை உள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விமான நிலையம் உள்ளது. யாரேனும் அமைச்சர் வரும் போது மட்டும் சுற்றுப் பயண விமானங்கள் நடக்கும். மாலைதீவு போன்று உள்ளக விமான சேவைகளுக்கு அதனை பயன்படுத்த முடியும் என்றார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனாதிபதி மட்டக்களப்பு வரவுள்ளார். இந்நிலையில் மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக 22 நாட்களாக போராடி வருகின்றனர். தங்களுடைய மேய்ச்சல் தரை பிரதேசங்களை அபகரித்து, ஏனைய மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள் சிலரின் வழிகாட்டல்களில் புதிதாக விவசாயம் செய்ய வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேண்டுமென்றால் அவர்கள் வேறு எங்காவது அதனை செய்யலாம். இதற்காக தங்களின் மேய்ச்சல் தரைகளை பயன்படுத்த முடியாது. அங்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து விவசாயம் செய்தால் அங்குள்ள பண்ணையாளர்கள் தமது மாடுகளை எங்கு கொண்டு செல்வது.

அத்துடன் பண்ணையாளர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதாக ஜனாதிபதி வாய்மூலம் வாக்குறுதி வழங்கியுள்ள போதும், மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் போராட்டம் தொடரும். இல்லாவிட்டால் இதன் விளைவுகளை மட்டக்களப்பு வரும் போது ஜனாதிபதி பார்க்கக்கூடியதாக இருக்கும். ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வர முதல் இதனை தீர்க்காவிட்டால் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய கெளரவத்தை நாங்கள் வழங்குவோம் என்றார். பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்காமல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருவாராக இருந்தால், அங்கே அவருக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கும் .

No comments: