
“என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்?” என சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக இரா.சம்பந்தன் தம்முடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.அத்துடன் தம்மை நேரடியாக கொழும்பில் சந்திக்குமாறு சம்பந்தன் கோரியிருப்பதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளாார்.
No comments: