News Just In

10/30/2023 10:49:00 AM

மட்டக்களப்பு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!




கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றின் நடத்துநர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவர் பயணி ஒருவரின் நண்பர்களால் மாத்தளை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கண்டியில் இருந்து மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கி சென்ற பேருந்திலேயே அத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் நடத்துநருடன் முரண்பட்டதன் காரணமாக அவரது நண்பர்கள் மாத்தளையில் அப் பேருந்தை மறித்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தின் போது பொலிஸாரின் தலையீடு காரணமாக பிரச்சினை தீர்க்கப்பட்டு பேருந்து மட்டக்களப்பை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது

No comments: