News Just In

10/14/2023 06:16:00 PM

முறிந்துவிழும் நிலையில் உள்ள மரத்தை வெட்டவிடமாட்டோம்!.மட்டக்களப்பு நகரில்அடம்பிடிக்கும் பள்ளிவாசல் நிருவாகம்.


முறிந்துவிழும் நிலையில் உள்ள மரத்தை வெட்டவிடமாட்டோம்.




மட்டக்களப்பு நகரில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசலுக்கு முன்னால் முறிந்து வீதியில் பாதசாதிரிகள் மீது விழும் அபாயத்திலுள்ள உள்ள பாரிய மரத்தை இன்று சனிக்கிழமை (14) வெட்டுவதற்கு சென்ற பிரதேச செயலக அதிகாரிகளை மரத்தை வெட்டவிடாது பள்ளிவாசல் நிருவாகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு பெரும் சர்ச்யையையடுத்து அங்கு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பள்ளிவாசலுக்கு முன்னால் வீதி சுற்றுவட்டத்திற்கு அருகில் பாரிய மரம் ஒன்று பழுதடைந்து முறிந்து விழும் அபாயநிலையில் இருக்கின்றது இந்த பள்ளிவாசலுக்கு அருகில் மட்டு வின்சன் பெண்கள் தேசிய பாடசாலையில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கல்விகற்றுவரும் மாணவர்கள் மற்றும் அந்த பகுதியிலுள்ள பல அரசகாரியாலயங்கள் நீதிமன்றம் போன்ற காரியாலயங்களுக்கு அந்த மரத்தின் கீழ் உள்ள வீதியால் நாளாந்தம் சுமார் 5 ஆயிரம் பேர் பிரயாணம் செய்கின்றனர்

இந்த நிலையில் குறித்த மரம் விழும் அபாயத்தையடுத்து வீதியால் பிரயாணிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அச்சத்தின் மத்தியில் பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் பிரயாணித்து வருகின்ற நிலையில் குறித்த மரத்தை அகற்றுமாறு பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த மரம் வீதி அதிகார சபையின் எல்லைக்குள் இருக்கின்ற நிலையில் இதனை அகற்றுவதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபை அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பிரதேச செயலாளர், மரநகரசபை ஆணையாளர் உட்பட மரத்தை பார்வையிட்டு இந்த மரம் முறிந்து விழும் அபாயத்தில் இருப்பதாபவும் இதனால் பாரிய அனர்த்தம் ஏற்பட வாய்பு இருப்பதால் இதனை முற்றாக அகற்றுமாறு தீர்மானிக்கப்பட்டு பிரதேச செயலாளர் மரத்தை அகற்றுவதற்கு மரக்கூட்டுத்தாபனத்திக்கு அனுமதி வளங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவதினமான இன்று பகல் 11 மணிக்கு மரத்தை வெட்டி அகற்றுவதற்காக உதவி பிரதேச செயலாளர் தலைமையில் வீதி அதிகாரசபை பணிப்பாளர் மரம் வெட்டும் பணியாளர்கள் அதனை அகற்ற சென்ற நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் அதனை வெட்டவிடாது தடுத்து நிறுத்தியதையடுத்து அங்கு பாடசாலை மாணவர்களின் பெற்றேர் ஒன்று திரண்டதுடன் முஸ்லீம்களும் ஒன்று திரண்டதையடுத்து அங்குபெரும் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டனர்

இதனை தொடர்ந்து மரத்தை முற்றக அகற்றுமாறு பிரதேச செயலாளர் உத்தரவிட்டு கடிதம் வழங்கியுள்ளார் எனவே மரத்தை முற்றாக அகற்ற பாதுகாப்பு தருமாறு பொலிசாரிடம் உதவி பிரதேச செயலாளர் தெரிவித்த நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் அகற்ற விடமாட்டோம் என பொலிசாருக்கு தெரிவித்த நிலையில் மரம் வெட்டுப்படாமல் இழுபறி நிலையில் சுமார் 5 மணித்தியாலங்களாக எந்த வித தீர்மானங்களும் அல்லாது இருந்துவருகின்றது

No comments: