2 கிலோ தங்கம் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – தமிழகம் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் வதந்தி காரணமாக 2 மணி நேரம் தாமதமாகவே நேற்று (18) புறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கப்பல் புறப்பட தயாரான போது, கப்பலில் 2 கிலோ தங்கம் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த கடற்படையினர் மற்றும் சுங்க பிரிவினர், பயணிகளை கப்பலில் இருந்து இறக்கி கடுமையான சோதனைகளை முன்னெடுத்தனர். அத்துடன் கப்பலிலும் சோதனைகளை மேற்கொண்டனர்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் எந்த பொருட்களோ , தங்கமோ கிடைக்காத நிலையில் கப்பலில் மீண்டும் பயணிகளை ஏற்றி பயணத்தை தொடர அனுமதித்தனர்.
இந்த சோதனை நடவடிக்கையினால் கப்பல் சுமார் 2 மணி நேர தாமதத்தின் பின்னரே புறப்பட்டு சென்றுள்ளது.
அதேவேளை நாளை (20) முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே மீண்டும் சேவையை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: