நாட்டில் ஈஸ்டர் தாக்குதல் போல் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு கூறுவது ?
ஜனாதிபதி தற்பொழுது நாட்டில் இல்லை. ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு வழங்கப்பட்ட மூன்று வார சேவை நீடிப்பிற்கு அனுமதி வழங்க அரசியலமைப்பு பேரவை மறுப்பு தெரிவித்துள்ளது. மற்றும் இவ் நியமனம் சட்ட விரோதமானது என கூறப்படுள்ளது. ஆனால் ஜனாதிபதி தரப்பு கூறுவது யாதெனில் ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது நியமிக்கப்பட்ட நியமனங்களை நிராகரிக்க அரசியலமைப்பு பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்படுகின்றது. எமது நாட்டில் பொலிஸ் மா அதிபர் இல்லாத நிலைமை தற்சமையம் காணப்படுகின்றது. சாதாரணமாக ஜனாதிபதியினால் மயிலத்தமடு மாதவனை தொடர்பாக பிரச்சனை சம்பந்தமாக பொலிசுக்கு வழங்கப்பட்ட ஆணை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டில் ஏற்கனவே இடம்பெற ஈஸ்ட்டர் குண்டுவெடிப்பு போன்ற பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றால் இதற்கு யார் பொறுப்பு கூறுவது. இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஒன்று தற்ச்சமையம் காணப்படுகின்றது.
No comments: