
நூருல் ஹுதா உமர்
மனித மேம்பாட்டு அமைப்பு - ஸ்ரீ லங்காவின் ஏற்பாட்டிலும் கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் தடுப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பிலும் "இளைஞர்கள் எதிர்கொள்ளும் சுகாதார சவால்கள்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வுச் செயலமர்வு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்காவின் பணிப்பாளர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் அவர்களால் ஆரம்பம் செய்யப்பட்ட இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஐ. எல். எம். றிபாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், செயலமர்வின் விரிவுரைகளையும் நடாத்தினார்.
குறிப்பாக இளைஞர்களின் மனப்பாங்கு, இளைஞர்கள் எதிர் கொள்ளும் சவால்கள், அவற்றை எதிர்கொள்ளும் யுக்திகள் போன்ற விடயங்களை முன்வைத்தார்.
நிகழ்வின் பிரதான வளவாளராக கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் தடுப்புப் பிரிவின், பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். எம். என். எம். தில்ஷான் கலந்துகொண்டு, தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற சுகாதார சவால்கள் மற்றும் முறையற்ற நடத்தைகள் குறித்தும், அவற்றை எத்ரிகொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கினார். குறிப்பாக சம காலத்தில் இலங்கையில் அதிகரித்துவரும் எச்.ஐ.வி தொற்று குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர், யுவதிகளுக்கு பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சான்றிதழ் கள் வழங்கி வைக்கப்பட்ட து

No comments: