News Just In

10/08/2023 06:15:00 PM

2023 உலகக்கிண்ண கிரிக்கெட்! இந்தியா அணிக்கு 200 ஓட்டங்கள் இலக்கு!

இந்தியா அணிக்கு 200 ஓட்டங்கள் இலக்கு!



2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (08) இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா வெற்றிப் பெற்ற நிலையில், அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Steven Smith 46 ஓட்டங்களையும் David Warner 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்தியா அணி சார்பில் R Jadeja 3 விக்கெட்டுக்களையும் Jasprit Bumrah 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

இதற்கமைய இந்தியா அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments: