News Just In

9/11/2023 08:20:00 PM

கிழக்கு மாகாணத்தில் மனோகரி பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு




-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் மனோகரி பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மனோதத்துவ நிபுணர் கலாநிதி கணேசன் தலைமையில் கிரீன் கார்டன் ஹோட்டலில் இடம் பெற்றது.

மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் (CHRD) ஏற்பாட்டில் கிழக்கு மாகாண அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களுக்கு நடாத்தப்பட்ட சமூக நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பயிற்சி நெறியான மனோகரி அலகினை பூர்த்தி செய்த நபர்கள் இதன்போது சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
சமூக மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும் சமூகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்குமாக இக்கற்கை நெறி அமைந்திருந்தது.

தனிநபர் குடும்பம் சமூகம் என்பவற்றிற்கு தேவையாக கருதப்படும் விடயதானங்கள் இக்கற்கை நெறியில் நிபுணர்களால் வழங்கப்பட்டது. ஆறு நாட்களைக் கொண்ட இக் கற்கை நெறியை கலாநிதி கணேசன் மற்றும் சண்முகதாசன் ரவிந்திரன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சி வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலைய நிறைவேற்று அதிகாரி மில்ஸ், தலைமைக் காரியாலய திட்ட முகாமையாளர் புஷ்பராணி பிகுறாடோ, மாவட்ட இணைப்பாளர் பரசுராமன் என பலர் கலந்து கொண்டனர்.




No comments: