ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இந்தியா
கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை 50 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா 10 விக்கெட்களால் வெற்றியீட்டி 8ஆவது தடவையாக ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்த வெற்றியானது தனது சொந்த நாட்டில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணப் போட்டியை இந்தியா நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வழிவகுத்துள்ளது.
ஆசிய கிண்ணத்துடன் 6 கோடியே 35 இலட்சம் ரூபா பணப்பரிசையும் இந்தியா தனதாக்கிக்கொண்டது.
மொஹமத் சிராஜ் பந்து வீச்சில் ஆசிய கிண்ண சாதனையை நிலைநாட்டி இந்தியாவின் வெற்றியை இலகுபடுத்தினார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 15.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
No comments: