News Just In

9/17/2023 08:23:00 PM

கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம்



பொலிஸ் பாதுகாப்பில் காணப்படுகின்ற இனவெறியர்கள் தாக்குதலை நடத்துகிறார்கள். அதுவும் ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி மீது இந்த கொடூரத்தாக்குதலை இனவெறியர்கள் நடத்தியுள்ளனர் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளரால் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற நாடாக இலங்கை தொடருகிறது. இந்தியாவில் இந்துத்துவ மதவெறியர்கள் எப்படி பொலிஸார் இருக்கும் போதே சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்களோ அப்படி கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது இனவெறிக்கும்பல்

 இதே வேளை .திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியமும்    மிகவும் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“சாதரண எங்கள் நினைவேந்தலைக்கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும்” என கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் வலியுருத்தியுள்ளது.




No comments: