News Just In

9/17/2023 03:24:00 PM

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி ஆரம்பம்: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி!


 இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி



இந்திய அணிக்கு எதிரான ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

கொழும்பு - ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் சற்று முன்னர் இறுதிப் போட்டி ஆரம்பமாக்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.

இறுதிப் போட்டியானது இன்று (17.09.2023) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும் போட்டியில் மோதுகின்றன.

ஆசியக் கிண்ண சுபர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் முறையே இரண்டு வெற்றிகள் பெற்றதன் மூலம் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டன.




ஆசியக் கிண்ணத் தொடரின் தற்போதைய சம்பியனான இலங்கை 7 ஆவது முறையாக கோப்பையை வெற்றி கொள்ளும் எதிர்பார்ப்புடன் போட்டியில் களமிறங்குகின்றது.

இறுதிப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் ஒன்லைன் ஊடாக நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ள இறுதிப் போட்டி பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

No comments: