
அண்மையில் சனல் 4 ஆவண தொகுப்பு தொடர்பில் வெளியான காணொளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் பிள்ளையானை மையப்படுத்திய விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த விடயமானது இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பெரிதும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், சனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நகரசபை மேயர் தியாகராஜ சரவணபவன் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
கிழக்கை அபிவிருத்தி பாதையில் கொண்டு வருவேன் என முன்வந்த சில அரசியல்வாதிகள் இன்று மக்களை கொன்று கோட்டாபயவை ஆட்சிபீடம் ஏற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களில் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
No comments: