மருந்துகளின் தரத்தை பரிசோதிப்பதற்காக சிறிலங்காவில் தரமான ஆய்வுகூடத்தை அமைப்பது தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உலக சுகாதார ஸ்தாபனத்துடன் (WHO) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான முறையான பொறிமுறை நாட்டில் இல்லாததை நிவர்த்தி செய்யும் முகமாகவே இந்த கலந்துரையாடல் நிகழ்ந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி மருத்துவர் அலங்கா சிங்குடன் நேற்று (15) ஒரு சந்திப்பை நடத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்த ஆய்வகத்தை தடையின்றி செயற்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் விபரக்குறிப்புகளை வழங்குமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் கோரியதாக அவர் தெரிவித்தார்.
“சிறிலங்காவில் இவ்வாறானதொரு ஆய்வகத்தை நிறுவ முடிந்தால், பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமும் வருமானத்தை ஈட்ட முடியும், என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
No comments: