News Just In

8/14/2023 11:25:00 AM

மின்துண்டிப்புத் தொடர்பாக வெளியான தகவல்!




மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் இருப்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

மின்சார விநியோகத்தை வெட்டுக்கள் இன்றி தொடர்ந்தும் பேணுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் மின்சார சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அவசியம் ஏற்பட்டால் டெண்டர் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேநேரம் திட்டமிட்ட மின்வெட்டு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments: