News Just In

8/31/2023 12:13:00 PM

இலங்கையில் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தது சினோபெக் நிறுவனம்!




இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் (Sinopec) நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது.​

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவின் Sinopec நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, 20 ஆண்டுகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க Sinopec நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சியின் விலைக்கு அமைய Sinopec எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: