News Just In

8/06/2023 05:35:00 PM

இலங்கை மக்களிடம் மின்சார சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை!

நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மாலை 06:00 மணி முதல் 08:00 மணி வரை தினசரி மின்சாரத் தேவை அதிகமாக உள்ளதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அக்காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மின்சாரத்தை பயன்படுத்தினால், தடைகளை குறைத்து மின்சாரத்தை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: