பொதுமக்களுக்கு வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு திறந்து (20) வைக்கப்பட்டது.
பிராந்திய பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவை திறந்து வைத்தார்.
பொதுமக்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அர்ப்பணிப்புமிக்க சேவைகளை வழங்குவதற்கும், வேலைகளில் ஏற்படும் தாமதம் மற்றும் குறைபாடுகளை இனங்கண்டு உடனடியாக தீர்ப்பதற்கு ஏதுவாக இப்பிரிவை திறந்து வைத்துள்ளோம் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வேலை நாட்களில் உரிய உத்தியோகத்தர்களை பொதுமக்களோடு ஒருங்கிணைக்கவும், பயண விரயங்களைக் குறைத்து செயற்றிறன்மிக்க சேவைகளை இப்பரிவின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதனை முகாமைத்துவம் செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வலகில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுமக்கள் குறைதீர்க்கும் முறைமையை (GRM) கையாளுவதோடு தகவல் அறியும் சட்டம் தொடர்பான விடயங்களை பிரதி பணிப்பாளரோடு ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்வார். மேலும் ஒவ்வொரு வேலைகளுக்குமான பரிசோதனைப் பட்டியலை வழங்கி (checking list) குறித்த விடயத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தரை அழைப்பித்து இருதரப்பு ஊடாட்டங்களை செய்வதோடு விடயத்தின் நியமங்களை அறிந்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments: