News Just In

6/07/2023 07:13:00 AM

யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழில் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி திறந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (10.06.2023) முதல் தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பணம் செலுத்தும் பகுதி திறந்து இருக்கும் என பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

No comments: