News Just In

6/04/2023 02:41:00 PM

உறவுகளின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சட்டவரைபு தவறிவிட்டது – சுமந்திரன்




உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைபானது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்திசெய்வதற்கு தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னாபிரிக்காவை ஒத்த முறையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கையில் ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்குக் கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இருப்பினும் அடிமட்டத்தில் எதுவுமே நிகழவில்லை என சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், யாருடனும் கலந்துரையாடாமல், சில புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபில், பொறுப்புக்கூறல் குறித்தோ அல்லது மன்னிப்பு அளித்தல் குறித்தோ எதுவும் இல்லை என்றும் இது காணாமல்போனோரின் உறவினர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்

No comments: