News Just In

6/08/2023 05:39:00 PM

குறுஞ்செய்தியால் பறிபோன ஒன்றரை இலட்சம் ரூபா பணம்! -மட்டக்களப்பில்பணமோசடி





நிறுவனமொன்றின் பெயரை பயன்படுத்தி மட்டக்களப்பில் பெண்ணொருவரிடமிருந்து பணமோசடி செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பெண்ணிடமிருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் இவ்வாறு மோசடியாக பெறப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளில் ஏனையவர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட நபர் இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி இணையவழி மூலமான வேலைவாய்ப்பு தொடர்பில் குறுஞ்செய்தியொன்று அனுப்பி இதனை தொடர்ந்து வேலைக்கான ஆரம்ப கட்டணம் என தெரிவித்து சிறு தொகை அறவிடப்பட்டு இதனை தொடர்ந்து ஒன்றரை இலட்சம் ரூபா என்ற மிகப்பெரும் பணத்தொகையொன்றும் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், மோசடியாளர்கள் பயன்படுத்திய வங்கிக்கணக்குகள் (Roy Mavin Nimesha Nilakshi - 200084804126 - 0754600730 - 15/2 Park Estate Kandapola Nuwara Eliya) உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன் மூலம் குறித்த நிறுவனத்தின் பெயரில் ஏதேனும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் வருமாயின் மிகவும் அவதானமாக செயற்படுமாறும், வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிருமாறு கோரப்படுமாயின் தயவு செய்து மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்து விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

No comments: