News Just In

6/03/2023 02:08:00 PM

இலங்கையில் தமிழர்களிடையே வாக்கெடுப்பு! நியூயோர்க் நகரில் வலியுறுத்தப்பட்ட விடயம்!




இலங்கையில் தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி வலியுறுத்தியுள்ளார்.

நியூயோர்க் நகரில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
தமிழர்கள் படுகொலை

1958, 1977, 1983 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நடந்ததைப் போன்று தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இலங்கை தீவில் நீடித்து வரும் தமிழர் மோதலுக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும், மீண்டும் மோதல்கள் ஏற்படாமல் தடுக்கவும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் வாக்கெடுப்புக்கு அவர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநிலையில் அனைத்து குடிமக்களின் அபிலாஷைகளையும், உரிமைகளையும் அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் உயிருக்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் மழுப்பலாக இருக்கும் நீதி

இலங்கைக்குள் தமிழ் சமூகத்துக்கான நீதி தொடர்ந்தும் மழுப்பலாக இருப்பதாக அவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை விடயத்தில் சர்வதேச நடுநிலை நிறுவனங்களின் தோல்விகளை எடுத்துரைத்த அவர், இலங்கையில் நடந்த சம்பவங்களை இனப்படுகொலையாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நீதி, சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கான நீடித்த முயற்சிகளையும் கோரியுள்ளார்.

கிழக்கு திமோர் மற்றும் தெற்கு சூடானில் வெற்றிகரமான வாக்கெடுப்புகளின் உதாரணங்களை அவர் எடுத்துரைத்துள்ளார்.

No comments: