இந்தியன் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி வரலாற்றில் அதிகளவான சதங்களை அடித்த விளையாட்டு வீரர் பட்டியலில் தற்போது விராட் கோலி அங்கம் வகித்துள்ளார்.
இது வரைக்காலமும் கிறிஸ் கெயில் ஆறு சதங்களை அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது விராட்கோலி அதனை சமன் செய்துள்ளார்.
நேற்றையதினம் (18.05.2023) நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் 63 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது 6 சதங்களுடன் கிறிஸ்கெயிலை சமன் செய்துள்ளார்.
இதேவேளை நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடியான ஆட்டமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இலகுவான வெற்றியை அமைத்துள்ளது என கூறலாம்.
இந்நிலையில் தற்போது 2023 இற்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இன்றையதினம் (19.05.2023) பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: