News Just In

5/25/2023 11:25:00 AM

முஸ்லிங்களின் உரிமைக்குரல்களில் ஒருவராக இருந்தவர்தான் வை.எல்.எஸ். ஹமீட்.!




நூருல் ஹுதா உமர்

தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் பிரத்தியோக செயலாளர், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம், திறமையான சட்டத்தரணி, சமூகத்தை நேசித்த அரசியல்வாதி, கல்முனை மண்மீது பற்றுக்கொண்ட வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் காலமான செய்தியறிந்து கவலை அடைந்தேன். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்) என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளரும், முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த அறிக்கையில் மேலும் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் எப்போதுமே தன்னை இணைத்துக்கொண்ட முன்னிலை போராளி அவர். பிழையான அரசியல் கலாச்சாரத்தை ஒதுக்கி முஸ்லிங்களின் விடுதலைக்கான பயணத்தை மீள ஆரம்பித்த வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் தலைவர் அஷ்ரபின் நம்பிக்கைக்கு மட்டுமல்ல முஸ்லிங்களின் நம்பிக்கைக்கும் எப்போதும் தகுதியானவராக தன்னை வளர்த்துக்கொண்டவர்.

கல்முனை மண்ணின் மூத்த அரசியல்வாதியான வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் மொழியாற்றலும், விவாதத்திறமையும் கொண்ட அரசியல் வியூகங்கள் அறிந்த ஆளுமை. அவரின் இழப்பு செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. முஸ்லிங்களின் உரிமைகள் சாந்த விடயங்களில் அக்கறையுடன் பணியாற்றிய ஒருவர். முஸ்லிங்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்து எப்போதும் பேசிக்கொண்டிருந்தவர். இவரது இழப்புகல்முனைக்கு மட்டுமல்ல நாட்டு முஸ்லிங்களுக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் இழப்பில் கவலையடைந்துள்ள அவரது குடும்பத்தினர், எமது கட்சி நண்பர்கள், ஆதரவாளர்கள், எல்லோருக்கும் எனது ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் செய்த அத்தனை விடயங்களையும் ஏற்று, அவரது சமூகப் பணிகளை பொருந்திக் கொண்டு பாவங்களை மன்னித்து உயரிய சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


No comments: