எலிக் காய்ச்சலின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் இலங்கை மருத்துவ சங்கம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் (09.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ சபை சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூகநல வைத்திய அதிகாரி குஷானி தாபரே கூறியுள்ளதாவது, சிறுபோகம், இடம்பெறும் மார்ச் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலும், பெரும்போகம் இடம்பெறும் செப்டெம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கிறது.
எனவே, குறித்த காலப்பகுதியில், விவசாயிகளுக்கு, இது தொடர்பில் தெளிவுபடுத்தி, நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், எலிக் காய்ச்சல் பரவலில் இருந்து, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் குஷானி குறிப்பிட்டுள்ளார்.
No comments: