
வெள்ளை சீனி, பால் மா போன்ற பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
வெள்ளை சீனி மற்றும் பால் மா விலை
அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியை சதொசவில் இன்று (15.05.2023) முதல் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 400 கிராம் பால் மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1080 ரூபாவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: