வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக இன்று (19.05.2023) காலை யாழ். ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் கடந்த புதன்கிழமை (17.05.2023) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது..
இதே வேளை

இன்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
இதற்கமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட பொலிசார் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது
No comments: