மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
குறித்த மாணவர் பெரியகல்லாறு கடலில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல்போயுள்ளார்.
பெரியகல்லாறு,பொற்கொல்லர் வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் ஜெசான் என்னும் 17 வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
மூன்று பேர் கடலுக்குள் குளிக்கச்சென்ற நிலையில் குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஸ்தலத்திற்கு சென்று களுவாஞ்சிகுடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாணவனை தேடும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதுடன் கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
No comments: