News Just In

4/29/2023 06:11:00 PM

கல்முனை பொலிஸ் நிலையத்தில் சித்திரைப் புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழா!

கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சித்திரைப் புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழாவானது நேற்று(28)கல்முனை தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையில் பொலிஸ் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி ஜெயன்ந்த ரத்னாயக்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எச்.டி.எம்.எல் புத்திக உட்பட மதகுருமார்கள் பொலிஸ் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து
இதில் தேசிக்காய் ஓட்டம்,கிடுகு இளைத்தல்,தேங்காய் துருவுதல்,முட்டி உடைத்தல், சாக்கு ஓட்டம், வேக நடை ஆண்கள், பெண்கள், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், சங்கீதக் கதிரை,யானைக்கு கண் வைத்தல் கலப்பு அஞ்சல் ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.

மேலும் இந் நிகவில் பிரதம அதிதிக்கு பொலிஸ் ஆலோசனைக்குழு பொதுச் செயலாளரும், காணி மத்தியஸ்த சபையின் பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி(LLB) அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்படது என்பதும் குறிப்பிடத்தகது.

(சர்ஜுன் லாபீர்)

No comments: