எஸ்.எம்.எம்.மமுர்ஷித்.
பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்'; என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினர் பல்வேறு வேலைத்திட்டங்களை மாவட்டத்தில் கிராமங்கள் தோரும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் மக்கள் மத்தியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை எடுத்துக்காட்டும் வகையிலான வீதி நாடகம் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினர் CBM நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் சுங்கான்கேணி கிராமத்தில் இன்று மாலை அரங்கேற்றினர்.
வை.எம்.சீ.ஏயின் திட்ட உத்தியோகத்தர் செ.பிறின்ஸ் அலெக்ஸ் தலைமையில் இடம் பெற்ற வீதி நாடகத்தில் கோறளைப்பற்று சமுகசேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர், பிரதேச செயலக, பிரதேசசபை உத்தியோகத்தர்கள், மாற்றத்திறனாளி அமைப்பினர் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இவ்வீதி நாடகத்தினை கதிரவன் நாடக குழுவினருடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து நடித்து வழங்கியிருந்தனர். இவ்வீதி நாடகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments: