News Just In

3/29/2023 07:33:00 AM

உலகளவில் மகிழ்ச்சி இல்லாத நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலகளவில் அளவுக்கு அதிகமான வளங்கள் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லாத 10 நாடுகளின் பட்டியல் அறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.நா சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் (Sustainable Development Solutions Network) எனும் அமைப்பால் 2012 முதல் ஆண்டுதோறும் மார்ச் 20-ஆம் திகதி சர்வதேச மகிழ்ச்சி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அமைப்பு 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களிடம் இருந்து உலகளாவிய மகிழ்ச்சி அடிப்படையிலான கணக்கெடுப்புத் தரவு வரிசைப்படுத்துகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு (2023), 137 நாடுகளை வரிசைப்படுத்தி அறிக்கை வெளியானது.

இந்த அறிக்கையில் சமூக ஆதரவு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை என மகிழ்ச்சியை அளவிடுவதற்கு 6 முக்கிய காரணிகளைப் பயன்படுத்தி நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் பின்லாந்து (Finland) முதல் இடம் பிரித்துள்ளது.

அதேவேளை, பட்டியலில் இலங்கை 112 ஆவது இடத்தையும் இந்தியா 125 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

No comments: