News Just In

3/01/2023 07:59:00 AM

வானில் இன்று நிகழவுள்ள அதிசயம்!

வானில் இன்றைய தினம் (01.03.2023) சூரிய அஸ்தமனமான ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மேற்கு வானத்தில் ஒரு அதிசய நிகழ்வு நிகழும் என நாசா தெரிவித்துள்ளது.

சந்திரன், வெள்ளி, வியாழன் ஆகிய மூன்று கோள்களும் முக்கோண வடிவில் வானில் தென்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன் மற்றும் வெள்ளி சூரிய மண்டலத்தில் உள்ள இரு பிரகாசமான கிரகங்களாகும். இந்த இரண்டும் சில நாட்களாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த மாத தொடக்கத்தில், இரண்டு கிரகங்களும் 29 டிகிரியால் பிரிக்கப்பட்டன இப்போது அவை மெதுவாக ஒருவருக்கொருவர் நெருங்கி வருகின்றன.

இவைகளோடு சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வளிமண்டலத்தில் சந்திக்கும் என்பதால் இரவு வானில் ஒரு அரிய நிகழ்வைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது கோள்களுக்கிடையேயான தூரம் ஒவ்வொரு இரவும் குறையத் தொடங்கியுள்ளது. பெப்ரவரி 20 ஆம் திகதிக்குள் இரண்டு கோள்களுக்கும் இடையிலான தூரம் ஒன்பது டிகிரிக்கு சற்று அதிகமாக இருந்தது.

பெப்ரவரி 27 அன்று, இடைவெளி வெறும் 2.3 டிகிரியாகக் குறைந்துவிட்டது. இதற்கமைய இன்று(01.03.2023) புதன்கிழமை மாலை, 0.52 டிகிரி இடைவெளியில் கிரகங்கள் மிக அருகில் இருக்கும். வியாழன் அளவு -2.1 ஆகவும், வெள்ளியின் -4.0 அளவிலும் பிரகாசிக்கும்.

இந்த இரண்டுக்கும் இடையில் சந்திரன் இருக்கும். மூன்றும் ஒன்று சேர்ந்து ஒரு முக்கோண வடிவத்தை வானில் பிரதிபலிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.



வானில் எங்கு பார்க்க வேண்டும்

நாசாவின் கூற்றுப்படி, ஒரு இணைப்பு என்பது இரண்டு கிரகங்கள், ஒரு கிரகம் மற்றும் சந்திரன் அல்லது ஒரு கிரகம் மற்றும் நட்சத்திரம் ஆகியவை பூமியின் இரவு வானில் நெருக்கமாகத் தோன்றும் நிகழ்வு தான்.

இது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு இடையில் அடிக்கடி நிகழ்கின்றன, ஏனெனில் அவை சூரியனைச் சுற்றி வருகின்றன.

சூரிய அஸ்தமனத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மேற்கு-தென்மேற்கு அடிவானத்தை நோக்கி தாழ்வாகக் இவற்றை உற்று நோக்குங்கள்.

வளர்ந்து வரும் பிறை நிலவின் மெல்லிய துணுக்குகளைக் காணலாம்.

அத்துடன் அன்று வானம் தெளிவாக இருந்து, நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், வியாழனை சுற்றியுள்ள பட்டைகளை கூட நாம் காணலாம்.

ஆகவே இன்று வானில் இந்த அரிய வானியல் நிகழ்வை காண மறக்காதீர்கள் என நாசா தெரிவித்துள்ளது.


No comments: