நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட, சாய்ந்தமருது பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சிறு வர்த்தக கண்காட்சியும், விற்பனையும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் திங்கட்கிழமை (27) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக ஸ்தாபக பிரதேச செயலாளரும், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃப்பிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம். எஸ். நளீர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச சிறு தொழில் முயற்சியாளர்கள் தனது உற்பத்திகளை காட்சிப்படுத்தியதுடன் விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
No comments: