
முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபந்திகே நேற்றைய தினம் இந்த தண்டனையை விதித்துள்ளார்.
ஆறு மாத கால சிறைத்தண்டனையும், 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மயோன் முஸ்தபாவின் குடியுரிமையை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை தெரிவு செய்தல் தொடர்பிலான நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கடந்த 2010ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு, தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவினை திரட்டும் நோக்கில் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மிலுக்கு 42 லட்சம் ரூபா வழங்க முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குறறச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மயோன் முஸ்தபாவிற்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
No comments: