News Just In

2/14/2023 04:25:00 PM

தேர்தல்கள் பிற்போடப்படுமா ?




தபால் வாக்குசீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கட்சி தலைவர்களுக்கு அறிவித்துள்ளமை உள்ளுராட்சி தேர்தல்கள் பிற்போடப்படலாம் என்பதற்கான அறிகுறி என ஆங்கில செய்தி இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

நாளை இடம்பெறவிருந்த தபால்வாக்குசீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு வழங்கிய வாக்குறுதியிலிருந்து பின்வாங்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை கேட்டுள்ளோம் என ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என நீதிமன்றத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் அவரிடம் கேட்டுக்கொண்டோம் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை இதனை நீதிமன்றத்திற்கு மீண்டும் தெரிவிக்கப்போகின்றோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார் என ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோடிட்டுக்காட்டினார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார் என ஆங்கில செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

No comments: