News Just In

2/19/2023 05:23:00 AM

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு இருப்பதை அறிவிக்க இதுவே காரணம்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெடுமாறன்




தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை முதன்முதலில் ராஜபக்ச ஆட்சியின் பின்னர் சிங்கள மக்கள் உணரத்தொடங்கியதன் காரணமாகவே விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு இருப்பதை அறிவிக்க தற்போது சிறந்த தருணமாக அமைந்தது என உலகத் தமிழர் பேரவை நிறுவனர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்ற செய்தி விடிவு காலத்திற்கான தொடக்கம்.இதனை எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பில் அவர் அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு சூழல் மாறிக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் ராஜபக்சர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற நிலைமை நீடித்தமை மற்றும் சர்வதேச சூழலின் மாற்றம் காரணமாக தன்னை வெளிப்படுத்த விடுதலைப்புலிகளின் தலைவருக்கு இதை விட சிறந்த ஒரு தருணம் இல்லையென அவர் எண்ணியமையினாலேயே இந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டதாகவும் கூறிப்பிட்டுள்ளார்.

மேலும்,பிரபாகரன் இறந்துவிட்டதாக 10 முறை இலங்கை அரசு பொய்யான தகவலை பரப்பி ஈழத்தமிழர்களின் மன உறுதியை குலைக்க முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இருக்கின்ற ஈழத்தமிழர்கள், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் மன உறுதியை குலைக்க வேண்டும். அவர்களை அச்சமடைய செய்ய வேண்டும், தங்களுக்கு அவர்களின் எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த பொய் செய்தியை தொடர்ந்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் இந்த அறிவிப்பின் பின்னர் உலக வாழ் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் என் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரை சேர்த்துள்ளார்கள்.

ஒருவர் இறந்துவிட்டார் என்றால் மரண சான்றிதழ் கொடுத்து அந்த பெயரை நீக்கிவிடுவார்கள். பிரபாகரனை கொன்றதாக சிங்கள அரசு பகிரங்கமாக அறிவித்துவிட்டது.ஆனால் ஏன் மரண சான்றிதழ் கொடுக்கவில்லை. ஏன் பிரபாகரன் பெயர் குற்றப்பத்திரிக்கையில் நீக்கப்படவில்லை.

அதாவது பிரபாகரன் இறந்ததை சிங்கள அரசும், இந்திய அரசும் நம்பவில்லை.இதன் காரணமாகவே இந்திய அரசு மரண சான்றிதழை கொடுத்து அந்த பெயரை நீக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நவீன யுகத்தில் விஞ்ஞானம் முன்னேறி உள்ளது. நான் தொலைபேசியில் பேசினால் எங்கு இருந்து பேசுகிறேன் என்று கண்டுபிடித்துவிட முடியும். அவர் என்னிடம் பேசினாலும், நான் அவரிடம் பேசினாலும் உடனடியாக தெரியும். யாருக்கு தெரியக்கூடாதோ அவர்களுக்கும் தெரியும். நவீன அறிவியல் பற்றி எதுவும் தெரியாமல் பலர் கேள்வி கேட்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments: